கையாளாகாத ஒருவனின் மனைவி
இந்தக் காலம் நம்மை நொடிபொழுதில் புரட்டி போட்டுவிடும். நாம் கூழங்கல்லாய் இருந்தால் ஒன்றுமில்லை. எத்தனை முறை காலம் நம்மை புரட்டி போட்டாலும், உருண்டு உருண்டு மெருகேறிக் கொள்வோம். ஆனால் நாம் ஆமைகள். ஒரு முறை புரட்டிப் போட்டால் மல்லாக்காக விழுந்து வானத்தில் நம்மை சுற்றும் கழுகினைப் பார்த்து அது எப்போது தரை இறங்கி நம்மை உண்ணுமோ என்ற பயத்தில் காலத்தினைக் கழிக்க வேண்டிருக்கும். நம்மைப் போல நடுத்தர வர்க்கத்தின் இழிவுகளை சுமந்து செல்லும் ராக்கி எனும் ராக்காயின்