\’ஆம். உன் கணவன் வருமுன் நான் போய்விடுகிறேன்,\’ என்றான்.
\’அவர் இப்போது வரமாட்டார்,\’ என்றாள்.
\’இருந்தாலும் எனக்கு வேலையிருக்காதா? நான் வீட்டுக்கு போகவேண்டாமா?\’
\’நமக்கு நிறைய நேரம் இருக்கிறது என்றாயே!\’
\’இவ்வளவு நேரம் இருந்தேனே! நீயும் உன் கணவன் வருமுன் உடையணிந்து கொள்.\’
இதைக்கேட்டு அவளும் அவசரமாக எழுந்தாள். ஆண்களே இப்படித்தான்போலும். கணவனாயிருந்தாலும் கள்ளக்காதலனாயிருந்தாலும் முதலில் இனிமையாகப்பேசி கொஞ்சுகிறார்கள்; தன் தேவை முடிந்ததும் மாறிவிடுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டாள். கொஞ்சலெல்லாம் ஆண்மையியக்குநீரின் விளைவுதான் என்பதையும் ஒவ்வொருமுறையும் அதைக்கேட்டு மயங்கி ஏமாறுவது பெண்மையியக்குநீரின் விளைவு என்பதையும் அவள் புரிந்துகொள்ள தொடங்கினாள்.
இருவரும் பின்வாசற்கதவருகே வந்தனர். \’அடிக்கடி வா,\’ என்று சொன்னாள். சரியென்றான். அவன் விடைபெற்று சென்றதும் அவள் பின்கதவை மூடி தாழிட்டாள்.
சற்றுநேரத்தில் முன்வாசற்கதவு தட்டப்பட்டது. அவள் அமைதியாகச்சென்று திறந்துவிட்டாள். அவள்கணவன் உள்ளே வந்து அமர்ந்தான். அப்போது மதியவுணவுநேரமாகியிருந்ததால், கொண்டுசென்று திருப்பிக்கொண்டுவந்த உணவை உண்ணத்தொடங்கினான்.
சற்றுநேரம் இருவரும் ஏதும் பேசவில்லை. பிறகு அவள் மெதுவாகத்தொடங்கி, \’எ…என்ன… சீக்கிரம் வந்துவிட்டீர்கள்?\’ என்றாள்.
\’ஒன்றுமில்லை, சும்மாதான்,\’ என்றான்.
அப்போது அவனை பார்த்த அவள் திடுக்கிட்டாள். அவன்கழுத்தின் இடப்பக்கம் அவள் அன்றுகாலை தன் நெற்றியில் இட்டிருந்த பொட்டு ஒட்டிக்கொண்டிருந்தது. தன் நெற்றியை தொட்டுப்பார்த்து அங்கு வெறுமையாயிருப்பதை உணர்ந்துகொண்டாள். சிரிப்பை அடக்கிக்கொண்டு, அவனுக்கு தெரியாமல் எப்படி அந்த பொட்டை எடுத்து அவன் பார்க்குமுன் தன் நெற்றியில் வைத்துக்கொள்வது என்ற தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்.