என் மேல அவ்வளவு ப்ரியமாடா..?
“விளையாண்டது போதும் ராகுல்.. வா.. கெளம்பலாம்…” நான் சொன்னதும் ராகுலின் முகம் சற்று சுருங்கியது. “ஏன் அங்கிள்..?” “போதுண்டா.. டைமாச்சு.. மம்மி தேடுவாங்க.. வீட்டுக்கு போ…” ராகுல் பேட்டை தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். என் கையில் இருந்த பந்தை வாங்கிக்கொண்டான். “நீங்களும் வீட்டுக்கு வாங்க அங்கிள்…!! ஒரு காபி சாப்பிட்டு போங்க..!!” ஐந்து வயது பையன், அந்த மாதிரி பெரிய மனிதன் தோரணையில் சொல்ல, எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. “இல்லை.. நான் வரலை..