சின்ன அய்யா!
காலேஜ்ல முதல் வருஷம் முடிஞ்சி சம்மர் வெகேஷன். கிராமத்துல எங்க மாந்தோப்பு ஒண்ணு இருக்கு. அதுல உள்ள காட்டேஜுல தங்கி நாலஞ்சி நாள் சுத்தமான காத்த சுவாசிக்கணும்னு போனேன். போய்ச் சேர்ந்த மறுநாள் காலைல காத்தாட தோப்புல நடந்துகிட்டிருக்கேன். ஒரு மாமரத்துல ஏகப்பட்ட பழங்கள். தளதளன்னு கனிஞ்சி தொங்குது. கும்முனு வாசனை. உடனே பறிச்சி திங்கணும்னு ஆசையத் தூண்டுது. எம்பிப் பாத்தேன். முடியலை. அடிமரத்த அணைச்சிகிட்டு ஏறினா அந்தக் கிளைக்கு கீழே போய் பழத்துக்கு அடிபடாம பறிச்சுக்கலாம். … Read more